2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அடுத்தவன் சொத்தில் ஆசை வைக்காதே’

Editorial   / 2018 மே 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலங்குகளின் வீடு ‘காடு’. அங்கு அவை மட்டும் வாழுவதில்லை. பறவைகள், பூச்சி, ஊர்வன, நுண்ணுயிர்கள் எல்லாவற்றுக்கும் இதுதான் வசிப்பிடம். இவைகள்தான், பல்லாண்டுகளாக அங்கே உத்தியோகப்பற்றற்ற நிரந்தர குடியிருப்பாளர்கள். 

ஆனால், மனிதர்களுக்குதான் மனச்சாட்சியே இல்லையே. விலங்குகளின் நிலத்தை, மனிதன் ஆக்கிரமித்தமையால், மனிதன்மீது வழக்குப்போட முடியாது. 

எமது மக்கள், பக்கத்து வீட்டுக்காரனுடன் மாத்திரம் சண்டைபோடுவதில்லை. காட்டு உயிரினங்களை வேட்டையாடுவதும், அழித்து நிலஆக்கிரமிப்பு நடாத்துவதால் யாருக்கு நஷ்டம்? 

விலங்குள் மட்டும் அழிக்கப்படுவது மட்டுமல்ல; இன்று மரங்களும் கோரமாகக் கொலை செய்யப்படுகின்றன.இதனால் முழு உலகமு​மே உஷ்ணமாகி, நல்ல காற்றின்றி, விழிபிதுங்கி ஒடுங்கப் போகின்றன. இந்த உண்மையை உணர எவருமில்லை. 

எதிர்காலம் என்பதும் எமக்கானதும் எமது தலைமுறைக்கானதுமான காலமாகும். எங்களோடு எமது வம்சங்களும் அழியலாகாது. அடுத்தவன் சொத்தில் ஆசை வைக்காதே; மிருகங்களும் மரங்களும் உலகப் பி​ரஜைகள்தான்.

வாழ்வியல் தரிசனம் 29/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X