2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இங்கு நீதி, நியாயம் எடுபடாது’

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிமை மிகுந்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பார்கள். வெளியே இவர்கள் சிரித்தபடி, உள்ளுக்குள் மனக்குமுறல்களுடன் வாழ்வார்கள். இவர்களிடம் நட்புக் கிடையவே கிடையாது. 

ஆனால், மக்கள் முன் அரவணைத்துக் கொள்ளும் காட்சிகள், அவர்களுக்கே ​தெரிந்த திரைப்படக் காட்சிகள்தான். புத்திசாலித்தனம் கூட ஒருவரை ஒருவர் தள்ளி வீழ்த்த உதவும் என நம்புகின்றார்கள். அறிவில் முதிர்ச்சியடைய ஆணவம் தலைகாட்டுவதுபோல, ஆட்சியைப் பிடித்தால் அன்பு குன்றி, ஆசைகள் மெருகேறி விடுகின்றன. இங்கு நீதி, நியாயம் எடுபடாது.

நியாயம், நீதியுள்ளவனை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆனால், எவரையும் குற்றவாளிகளாக்கும் வல்லமை அரசியலுக்கே சாத்தியமாகின்றது. இதனாலேயே வல்லமையில்லாத நல்லவர்கள், இந்த அரசியல் பிரவேசத்துக்குள் வர மறுக்கிறார்கள்.

மக்கள் உட்காரக்கூடாது; எழுந்து துஷ்டரை வீழ்த்துங்கள்.

வாழ்வியல் தரிசனம் 07/06/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .