2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘உலகை வென்ற மனிதன்’

Editorial   / 2018 ஜனவரி 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையற்ற ஆசைகளைத் துறக்கச் செய்வதே உன்னதமான ஆன்மீகம். ஆன்மாவின் வலுவை ஆன்மீக ஈர்ப்பு வரவேற்கின்றது. 

ஆனால், முறையற்ற ஆசைகளை நிறைவேற்ற ஆன்மீகத்தை ஒரு கருவியாகக் கருதினாலே அது ஆபத்தாக முடியும். 

நியாயமான முறையில் எவரும் பொருளீட்டலாம். ஆனால் அறிவு, கல்வியில் உயர்நிலையில் உள்ளவர்களில் சிலர் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் விடயத்தில் மனம்போனபடி, வாழ்வை மேற்கொண்டு, தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்வது அபத்தம். பிறர் துன்பங்களைத் துடைப்பவனே ஆன்மீகவாதி. 

 சேமித்தல் என்பது தூயநோக்கத்துடன் ஆற்றும் பணிகள்தான். வாழப்பிறந்த மனிதன், வாழ்க்கைப் பயணத்தில் வரும் இ​டையூறுகளுக்காகத் தனது பிறவியின் நோக்கத்தை நோகடிக்கவியலாது.  

வாழும் நல்மார்க்கத்தைத் தௌந்தவ​னே உலகை வென்ற மனிதன்.  

வாழ்வியல் தரிசனம் 11/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X