2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘எங்களை மீறி எதுவும் நடக்காது’

Editorial   / 2018 மே 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் வீட்டில் செலவுகள் அதிகரித்து விட்டதா? இதைக் குறைக்க வழிகளைக் கண்டறிந்தே ஆக வேண்டும். தினசரி உங்களை அறியாமலேயே, ஏதோ ஒரு செலவைச் செய்து கொண்டே இருக்கின்றீர்கள்.  

எனவே, உங்களாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் செலவுகளை எழுதி வைத்திடுங்கள். எந்தச் சிறு செலவாயினும் அதை விட்டுவைக்காமல், எழுதியே தீருங்கள். 

மாதக் கடைசியில் மொத்தச் செலவைக் கணக்கிடுங்கள். அப்போதுதான் தவறு எங்கே நடந்தது எனப் புரிந்து கொள்வீர்கள். சின்னச் செலவுகள்கூடப் பெரிதாக உருவெடுக்கும்.  

அநாவசியச் செலவுகளையும் எங்களை அறியாமல் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளையும் அவதானியுங்கள். அவைகளை எப்படிக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் எனக் கணக்கீடு செய்யுங்கள்; ஓரளவாவது குறைந்தே தீரும். எங்களை மீறி எதுவும் நடக்காது என்பதை நம்புங்கள்.

வாழ்வியல் தரிசனம் 01/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .