2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘கடமைகளை செய்தபடி இருப்போமாக’

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் எங்கே இருந்தோம்? என்னவாக முன்னர் இருந்தோம்? தற்போது என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? இனிமேல் என்ன செய்வோம்? என்று எல்லோருமே தங்களைத் தாங்கள் கேட்பதுண்டு.  

அப்படி ஓர் உண்மை விளக்கத்தைத் தம்மிடம் கேட்பதற்கு யாருக்கும் இஷ்டம் இல்லை. அதனால் என்ன வந்துவிடப்போகிறது எனவும் உள்மனம் சொல்லும். 

வாழ்க்கை முடிச்சுகள் எல்லாமே அவிழ்க்கக் கூடியதுமல்ல; எந்தப் புத்திசாலிக்கும் ஏன் நல்ல நடத்தை, அறிவு நிரம்பியவர்களுக்குத் தெளிவு பூரணமாகி விடுமோ? அறியோம்! 

ஆனால், ஒன்றைக் கேள்மின். எங்களுக்கான கடமைகளைப் புனிதமாகச் செய்தபடி இருப்போமாக. நீதியை தர்மத்தின் வழியே நல்லது எனத் தெளிந்து, அவ்வண்ணம் ஒழுகுவீர்களாக. மனம் விழித்தால், அகிலம் எமக்குள்.

     வாழ்வியல் தரிசனம் 21/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X