2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘காதலில் கடமைகளை மறத்தல் ஆகாது’

Editorial   / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலிக்கத் தெரியாதவர்கள் எல்லோரும் பலவீனமானவர்கள் என இளவட்டங்கள் மற்றவர்களைக் கிண்டல் செய்வதைக் கேட்டிருப்பீர்கள். காதல்தான் வாழ்க்கை, அதுதான் தங்களது தலையாய இலட்சியம் என எண்ணும் இவர்கள், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைக்கப்போகின்றோம் என்பது பற்றிச் சிந்திப்பதுமில்லை.

காதல் குற்றமானது என யாரும் சொல்ல முடியாது. அதற்கு முன் உங்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் நீங்களே கேட்பீர்களாக.

இளமையின் வலிமை கல்வியில் கவனம் செலுத்துவதில் மட்டும்தான் அமையவேண்டும். குடும்பநிலையைக் கருத்தில் கொள்ளாமல் எடுத்ததும் காதல் வலையில் சிக்குவது ஆண்மைக்கே இழுக்கு. பெற்றோர், சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் செய்யப்போகும் கடமைகள் என்ன?

இன்று பெண் பிள்ளைகளே தங்கள் குடும்பங்களைக் கடும் உழைப்பால் காப்பாற்றி வருவது உங்களுக்குத் தெரியாதா? காதல் வேகத்தில் கடமைகளை மறத்தல் ஆகாது. உரிய காலத்தில் எல்லாமே நல்லதாய் அமையும். காதலும் நிலைபெறும். 

வாழ்வியல் தரிசனம் 21/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .