2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சுவைபட உரைத்தல் சுலபமானது அல்ல’

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதுபுதிதாக மாணவர்களுக்குச் சுவாரஷ்யமாகச் சொல்லிக் கொடுப்பவரே நல்லாசான் ஆகிறார்.  

ஒரு திறமையான ஆன்ம வலுப்பெற்ற இவர்கள், கல்வியூட்டும்போதே, அதை உள்வாங்கி, உடன் மனனம் செய்யும் ஆற்றல்களை வழங்கிவிடுதல் அற்புதமானது.  

இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள், தமது கற்பித்தல் முடிந்தபின் வகுப்பைவிட்டு வெளியேறும்போது, எமது முகம் வாடுவதும், அவர் மீண்டும் வகுப்புக்குள் பிரவேசிக்கும்போது, எங்கள் முகம் மலர்வதும் நாம் பெற்ற அனுபவமாகும். 

சுவைபட உரைத்தல் சுலபமானது அல்ல! நல்ல உள்ளத்தெளிவும் அனுபவ ஞானமும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவச் செல்வங்களுடன் உள்ளத்துடன் உறவாடுவது மேலான கலையாகும்.  

முன்னைய ஆசிரியர்கள் கல்வியை காசாக்க எண்ணியவர்கள் அல்ல; விடுமுறை காலங்களிலும் போதித்தார்கள். ஏழை மாணவர்களை வாழவைத்த வள்ளல்கள் இவர்கள். இவர்களின் நினைவுகள் என்றும் எம் நெஞ்சத்தில்.

     வாழ்வியல் தரிசனம் 18/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X