2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சோர்வுக்குச் சொந்தக் காரராக வேண்டாம்’

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருப்பத்துடனும் சுறுசுறுப்புடனும் கருமமாற்றுபவர்களுக்குக் காலம், கவலையின்றிக் கழிவதாகவே தெரியும். சும்மா இருந்தால், ஒரு நொடியும் பல யுகங்கள்தான். 

கவலையுடன் வாழ்வதைவிடக் களிப்புடனும் வீச்சுடனும் காரியமாற்றினால் வெறுப்பு, அலுப்பு, சோகம் கரைந்தே போய்விடும்.  

கவலைப்படுவது சிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கின்றது. வேலை செய்யாதவர்களே, பொழுதை எப்படி வீணாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பார்கள். பொழுதை வீணாக இழப்பது, வாழ்க்கையைக் களையிழந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிடும்.

சோர்வுக்குச் சொந்தக் காரராக வேண்டாம்; உழைப்புக்கு உகந்தவராகச் செழித்து வாழ். 

வாழ்வியல் தரிசனம் 31/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X