2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தவறு செய்தவர், பாவங்களைப் பற்றிக்கொள்கிறார்’

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களை ஒருவர் அநாவசியமாக, நியாயமற்றுத் திட்டி அவமானப்படுத்தும் போது, நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, செய்த பாவங்களின் எடைகள் குறைக்கப்படுகின்றன. தவறு செய்தவர்களே அந்தப் பாவங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்.  

எங்களது தவறுகளுக்கான தண்டனைகள் பலவாறு அனுபவிக்கப்படுகின்றன. ஆனால், ஒருவரின் மேல் சுமத்தப்படும் வீண் பழிகளை இன்னுமொருவர் பாரம் சுமப்பது பரிதாபம்.  மனிதனின் சுமைகள் ஏதோ ஒரு விதமாக இறக்கப்பட்டு விடுகின்றன. எல்லோரும் சுதந்திர புருஷராகத் திகழ, செய்த தவறுகளுக்கு தண்டனையும் மன்னிப்பும் வழங்கப்படவேண்டும்.  

சிலர் படும் துன்பங்களில் அனேகமானவை, அவர்களால் உற்பத்தி செய்யப்பட்டவைதான்.  

விடுதலை பெறுவது என்பது, உலகின் நன்மதிப்பை முழுமையாகப் பெறுவதிலிருந்தே பெறப்படுகின்றது.  

கட்டுகளைக் களைய, செய்த பாவங்களை ஏற்று, உண்மைகளை உணர்வதுதான் ஒரே வழி. 

 

வாழ்வியல் தரிசனம் 13/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X