2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும்’

Editorial   / 2018 பெப்ரவரி 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரின் வாழ்க்கையில் முதற்படி, தனக்கும் பிறருக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும்.

தன்னம்பிக்கை உள்ளவர் தாழ்வு மனப்பான்மையுடன் வாழமாட்டார். மேலும், தன்னைப் பற்றிய மேலாதிக்க, உயர் மதிப்பீட்டுடனும் மற்றவருக்கு ஒன்றுமே புரியாது வாழும் வாழமாட்டார்.

எனவே, தாழ்வுமனப்பான்மையும்  உயர்நிலை மனப்பான்மையும் அகன்றால்தான், பிறர் மதிக்கும், நம்பிக்கை மிகுமாந்தராக  வாழ முடியும்.

எல்லோரையும் கௌரவிக்கும் எண்ணங்கள் மலர்ந்தால், அகிலத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும் வல்லமை பெற்றவர்களாவீர்கள். மக்களின் ஆசீர்வாதம் இன்றி, வாழ்க்கையின் சிறப்பைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது.

செயற்கைத் தனமான உரையாடல்களும் போலியான நடிப்பும் மக்களின் ஈர்ப்புக்கு உதவாது. அரசியல்வாதிகளில் பலர், இதை நம்பியே பிழைப்பை ஓட்டிவருகின்றார்கள்.

என்றும் நிரந்தரமான அன்பு, நிலைபெறுதல் இன்பகரமானது. பார்வையை விரிவாக்குக. மக்களின் தரிசனம் கிட்டும் அன்பர்களே.  

வாழ்வியல் தரிசனம் 19/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .