2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புத்திமதி கூறவும் ​பொறுமை அவசியம்’

Editorial   / 2018 ஏப்ரல் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலருக்கு வலிந்து புத்திமதி சொன்னால், அது சிலவேளை, எமக்கு பெரிய அவமானத்தையும் உண்டு பண்ணி விடலாம். 

நல்லது சொன்னாலே, சிலருக்குப் பிடிக்கவும் பிடிக்காது. தாங்கள் சொல்வது, நினைப்பதுவே மேலானது என எண்ணுபவர்கள், எக்காலத்திலும் தங்களை மெருகேற்றிட முடியாது.  

“எல்லாமே தெரியும்” என்பவர்களுடன், விவாதம் செய்ய முடியாது; உபதேசங்களும் எடுபடாது. சில விடயங்களை நாம், கண்டு கொள்ளாமல் இருப்பதே மேல். வீறாப்புடன் பேசுபவர்கள், ‘பட்டால்தான் புரியும்’ என்பது போல், விரும்பாத அனுபவங்களை வலிந்து பெற்றாவது, உண்மையை மறைத்து விடுவார்கள். 

பிள்ளைகளிடம் நாம், பாராமுகமாக இருந்துவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு நிலையில், வழிக்கு வந்துவிடுவார்கள். நல்லதைச் சொன்னால், கேட்கும் மனப்பக்குவம் பெரியவர்களிடம்தான், பலதடவை இல்லாமல் போய் விடுவதுண்டு. 

இடம், பொருள், சூழ்நிலை அறிந்தே நாம் இயங்க வேண்டியுள்ளது. புத்திமதி கூறவும் ​பொறுமை அவசியம். 

வாழ்வியல் தரிசனம் 27/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .