2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மகிழ்ச்சி, தானாகவே நெஞ்சத்தில் பிரவாகிப்பதாகும்’

Editorial   / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகிழ்ச்சியில் ஒருவகை, தானாகவே நெஞ்சத்தில் பிரவாகிப்பதாகும்.  மற்றையது, நாமாகவே அதை உருவாக்குவதாகும்.

சதா கவலையை வரவழைத்து, மனம் குமைவதைவிட, நாமே எம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைக்க, நல்ல வழியில் சென்று அதைச் சுவீகரிப்பதுமாகும். பிறரைச் சந்தோசப்படுத்துவதால் உருவாகும் மகிழ்ச்சி உயர் நிலையானது. நமது சந்தோசத்துக்காக இன்னொருவரை வருத்துவது மகாபாவச் செயலாகும்.

அறிவு ஞானத்தில் மேலோங்கி இருப்பவர்கள் சதா இனிய சிந்தனையுடன் புனிதமான நிலையில் களிப்பெய்திய வண்ணம் இருப்பார்கள். படிப்படியாக நாமே பக்குவப்படுத்தினால் உங்களை அறியாமலே, சந்தோச சாகரத்தில் மிதந்துநிற்பீர்கள்.

வாழ்வியல் தரிசனம் 02/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X