2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘மனிதாபிமானம் கசிந்து நொந்தது’

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்தப் பிரதான நெடுஞ்சாலையின் நடைபாதையின் ஓரத்தில், எனது நண்பன் சந்திராவைக் கண்டபோது, அதிர்ந்து போனேன். தேகத்தில் பெருங்காயம். குருதியின் கோரப் பிரவாகம். நான் அந்த இடம் நோக்கி நடந்தபோது, தற்செயலாக இதைப் பார்க்க நேர்ந்தது. 

‘யாரோ தங்களது மோட்டார் வாகனத்தில் இருந்து, இவரை வீசி எறிந்ததைக் கண்டேன்’ என ஓர் இளைஞன் என்னிடம் சொன்னான். “நான் இவரின் நண்பன்” என்று சொன்னதும், உடன் எனக்கு அனைவரும் உதவி நல்கினர். ஒரு காரில் சந்திராவை ஏற்றி, வைத்தியசாலையில் அனுமதிக்கவும் உதவினர். என்னிடம் பேசிய இளைஞன், சந்தி​ராவைத் தாக்கி, விட்டெறிந்து சென்றவர்களின் வாகன இலக்கத்தைத் தந்தான்.  

உடன் பொலிஸாருக்கும் அறிவித்து விட்டேன். அன்று இரவு முழுவதும் சித்தப்பிரமை பிடித்ததுபோல் வைத்தியசாலையில் இருந்தேன். 

அடுத்த நாள், காலையில் தினசரியைப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். மேற்படி செய்தியில், அந்த இளைஞர் தந்த இலக்க வாகனம், அதே நாளில், அதே நெடுஞ்சாலையில் கோரவிபத்தில், அனைவருமே ஸ்தலத்தில் பலியாகிவிட்டனர். என்மனம் கனத்தது. “ஹே இறைவா என்ன இது”? என் மனிதாபிமானம் கசிந்து நொந்தது. 

     வாழ்வியல் தரிசனம் 28/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X