2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கெட்டவைகளை அழிப்பது மேலானது’

Editorial   / 2018 ஜூலை 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசைக் கொடுத்துக் காமத்தைப் பெறும் ​கூட்டம் பெருகிவிட்டது.இயல்பான காதல்- காமம், சுத்தமான மன இயல்புடனேயே மிளிர வேண்டும். 

காதலையும் காமத்தையும் கட்டுப்பாடற்ற முறையில் முனைவது ஆபத்தானது. கெட்ட நோக்கத்துடன் அத்துமீறி நடப்பது, கொலைக் குற்றத்தை விடக் கொடுமையானது. 

பாலியல் வன்கொடுமை போன்ற செயல்கள், மிகையாவதற்கு முக்கிய காரணம், அடிப்படையான விடயம் போதைப்பழக்கம் மட்டுமல்ல; எந்தவித போதைப் பழக்கங்களுக்கும் அ​டிமையாகாதவன் கூட, காமவெறியுடன் திரிகின்றான். அப்படிப்பட்டவர்களைக் கண்டுகொள்வதே சிரமமானது. மறைந்திருந்து தாக்கும் மிருகம் போன்றவர்கள். 

மனம் சிதைந்த மூக்கர்களின் சகவாசம், காணக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்பது, பெற்றோரின் அசமந்தப் போக்கு எல்லாமே குற்றங்கள் புரிவதற்குத்  தூண்டுகின்றன. உலகம், விழிப்புடன் கெட்டவைகளை அழிப்பது மேலானது.  

வாழ்வியல் தரிசனம் 17/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .