2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மனவலிமையே மேலானது’

Editorial   / 2018 ஜூலை 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிமை என்பது உடல்வலிமை என எண்ணலாகாது.சித்தத்தைச் சுத்தமாக வைத்திருப்பதால், உருவாகும் மனவலிமையே மேலானது. தேகசுகம் தேவையானதுதான். இன்று மட்டுமல்ல, எமக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் வலிமைமிகு எண்ணங்களின் வழிகாட்டல்களில்தான், இன்று இந்தப் பூமி, நிலைபெற்று வாழ்ந்துவருவது கண்கூடு. 

மனிதர்கள் கண்டபடி வாழ்ந்தால், இந்தப்பூமி வாழ்ந்துவிடுமா? ஒழுக்கம் பற்றிய கல்வியும் வாழ்க்கை முறையும் மிகவும் பழைமையானவை என்பதை அறிவீர்களாக. 

மனதைப் பக்குவப்படுத்தல் மூலம், வலிமை எளிதில் எம்மைப் பற்றிக்கொள்ளும். எல்லா மதங்களுமே மனப்பக்குவப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. 

தியானம், யோகம், கட்டுப்பாடான வாழ்க்கையை நாம் கண்டுகொள்ளாமல் இனியும் இருக்கக்கூடாது. உலக ஷேமம் முதன்மையானது. ஒவ்வொருவரும் இணைந்து செயற்பட்டால் புவனம் புனிதமாகும்; இனிமை பெறும்.  

வாழ்வியல் தரிசனம் 30/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .