‘அன்பைப் பகிர்வோருடன் இணைக’

மக்களில் பலர் எதிர்மறையான செய்திகளையே விரும்பிப் படிக்கிறார்கள். யாராவது கெட்டதனமாகப் பேசினால், அதனையே சுவாரஷ்யமாகக் கேட்பதுடன் அதை மிகைப்படுத்தி, அடுத்தவர்களுக்கும் சுவைபடச் சொல்கிறார்கள். 

தவறு எனத் தெரிந்தும், அதன் மேல் நாட்டம் கொள்வது, மனச் சேதத்தை உண்டுபண்ணும். எங்கேயோ உள்ள நடிகர், நடிகைகளின் வாழ்க்கையைத் துருவித் துருவி ஆராய்ந்து கொள்பவர்கள், தங்கள் வாழ்க்கையின் பக்கங்களில் நல்ல பதிவுகளை ஏற்படுத்த முனைவார்களாக. 

எண்ணங்களைத் தூய்மைப்படுத்த, நெஞ்சத்தை நேரிய சிந்தனையினுள் உள்நுழைத்தலே சாலச் சிறந்தது. எந்த நேரத்திலும் குற்றவியல் செய்திகளையும் பழிக்குப் பழிவாங்கும் ​தொலைக்காட்சி நாடகங்கள், கேவலமான மேடைப் பேச்சுகள், அவர்களின் சவால்கள் போன்றவைகளை அறவே தவிர்ப்பது மேலானது. 

தேவையற்ற முறையில் கூடிப் பேசுவோர், கூட்டத்திலிருந்து விலகுக. உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் விவாதித்து, அதில் வெற்றி பெற வேண்டும் எனும் நினைப்பைத்  தவிர்க்கவும். அன்பைப் பகிர்வோருடன் இணைக.    

வாழ்வியல் தரிசனம் 26/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

  • Badurdeen, k Sunday, 28 April 2019 12:39 PM

    Love

    Reply : 0       0


‘அன்பைப் பகிர்வோருடன் இணைக’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.