‘ஆன்ம ஈர்ப்பை வேருடன் களைவது தப்பு’

எம்மோடு இரண்டறக் கலந்து நிற்கும் மொழி, மதம், இனம் என்பன எங்கள் மரபுடன் இணைந்தவை; மரபணு சார்ந்தவை. இவை காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக எங்கள் நெஞ்சோடு, உணர்வோடு சங்கமித்தவையாகும்.

வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள பிரமாண்டமான கட்டடங்கள், இயற்கை வனப்புகள், நவீன முறையிலான தொழில் நுட்ப வளர்ச்சிகளை வியந்து போற்றுகின்றோம். அவை உண்மைதான்.

எந்த நாடு என்றாலும், அவைகளின் அழகை, பெருமைகளைப் போற்றிப் புகழ்வதில் தவறு இல்லை. 

இத்தனைகளையும் பார்த்துவிட்டு, எங்கள் தாய் நாட்டின், எமது சொந்த ஊரில் உள்ள வீட்டுக்குள் நுளையும் போது, சில்லென வீசும் காற்றின் ஸ்பரிசம் உங்களை வரவேற்பதை உணர்வீர்கள்.

அதுமட்டுமல்ல, வீட்டின் தாழ்வாரத்தின் ஓலைப்பாயில் படுக்கும்போதுதான், சந்தோஷமான சுதந்திர மிடுக்கும் அமைதியும் நம்மில் தவழுகின்றது. எந்த வசதிகளுக்காகவும் மனதைப் புறத்திசையில்த் தள்ளுவது, நஷ்டம் எமக்குத்தான்.

ஆன்ம ஈர்ப்பை வேருடன் களைவது தப்பு.  

வாழ்வியல் தரிசனம் 16/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


‘ஆன்ம ஈர்ப்பை வேருடன் களைவது தப்பு’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.