‘எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலம்’

தங்களுக்கு என்னென்ன ஆதாயம் கிடைக்கும் எனத் தேடுகின்றவர்களில், பிறருக்கு ஏதாவது கொடுத்தது உண்டா எனத் தங்களைத் தாங்களே கேட்டேயாக வேண்டும். 

எவருக்கும் எதுவுமே கொடுக்காத குணம், வெட்கப்படக்கூடியதாகும். அது சுய கௌரவத்தையும் பாதிக்கும் என்பதை உணர்வார்களாக. 

ஒரு பிச்சைக்காரர், தன்னிடமுள்ள பணம் அனைத்தையும் காலில் செருப்பு இல்லாத ஏழைச் சிறார்களுக்கு வழங்கியதாகச் செய்தி வந்தது. சுனாமி எமது நாட்டைத் தாக்கியபோது, அவரைப் போல வசதியற்ற பலர், ஆற்றிய பணிகள் ஏராளம். அந்த நேரத்தில் பாகுபாடு அற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், இனமதபேதமற்று, பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உதவினார்கள். 

பிறரிடம் எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலத்தை ஏற்படுத்தும். இலவசங்களையே அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்ப்பதால் நாடுகள் ஏழையாகி விட்டன. இத்தகைய நாடுகள், வசதிகூடிய நாடுகளிடம் கையேந்தி, தங்கள் நாட்டை அடிமை நிலைக்குள் உட்படுத்தி விட்டன. இதற்கு மேலாக ஊழல், சுரண்டலால் கொடுக்கும் குணமும் கருகிவிட்டது.  

வாழ்வியல் தரிசனம் 25/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


‘எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலம்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.