Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வைராக்கியம் இல்லாமல் எப்படி இயங்க முடியும். வீடு தேடி எல்லாமே வரும் எனப் பலர் கருதுகின்றனர். எதற்கும் காலம் வரும் என நம்பி, அடுத்தவரிடம் கடன் கேட்கக் கூடாது.
படிக்கச் சோம்பல் பட்டவன் எப்படிப் பரீட்சையில் சித்தி பெற முடியும். தொழிலைத் தெரியாமல் தொழில் அதிபராக ஆசைப்பட முடியுமா?
வைராக்கிய சிந்தனையினால், அடிமட்ட நிலையில் இருந்தவர்கள் அதி உயர் நிலைக்கு, எங்கள் கண்ணெதிரே வந்திருக்கின்றனர்.
இட்டியை நடைபாதையில் இருந்து விற்பனை செய்து கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து, அதைச் செய்யும் விதத்தை அறிந்து, ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நடைபாதையில் வியாபாரத்தை ஆரம்பித்தார். மன வைராக்கியத்துடன் தொழிலை ஆரம்பித்தவர், பல உணவகங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். எதிர்ப்படும் துன்பங்கள், சோதனைகளில் மூழ்கினால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா?
சோதனைகளே அனுபவங்களை ஊட்டுகின்றன. மனதில் வைராக்கியத்தை உருவாக்கி, மனிதனாக்குகின்றன.
வாழ்வியல் தரிசனம் 09/11/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .