Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நல்லவர்கள், பெரியோர்கள் என்றைக்காவது ஒருநாள் தவறு செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால், கெட்டவர்கள் எப்பொழுதுமே தனக்கும் பிறருக்கும் தீங்கு செய்பவர்களாகவே இருப்பார்கள். இவர்கள், தாங்கள் செய்துவரும் கெடுதல்கள், தவறுகளை ஒப்புக்கொள்வதுமில்லை.
ஆனால், நற்குணமுடையோர், சின்னச் சின்னத் தவறுகளையும் நினைத்துத் துன்பப்படுவதுடன் தங்களைத் தாங்களே உணர்ந்து திருந்திக் கொண்டும் விடுவார்கள்.
வாழ்க்கையில் பற்பல சம்பவங்கள் இணைந்துள்ளன. இதன்போது, எம்மை அறியாமல் மூளையில் சில விடயங்கள் பதியாமல் போகும்.எல்லாச் சமயங்களிலும் எச்சரிக்கை உணர்வு பிசகிப் போகலாம்.இதனாலேயே அறிவை மயக்கித் துன்பம் சூழ்கின்றது; தவறுகளும் உள்நுழைந்து விடுகின்றன.
எனவே, மனிதர் நெறி பிறழாமல் வாழ்வதற்கு, தீட்சண்யமான பார்வையுடன் உலகை நோக்க வேண்டும். இந்தத் திறனை, பண்பு நெறியூடாக வளர்த்து, இயங்க வேண்டியவனாகின்றான் மனிதன். பண்பு துன்பத்தை அறுக்கும்.
வாழ்வியல் தரிசனம் 22/06/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .