‘நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும்’

தனது பழைய நண்பர்களைக் கண்டால், முகம் சுழிப்பவர்களை நம்பாதீர்கள். இத்தகைய பேர்வழிகள் உங்களையும் பொறுத்த சமயத்தில், கைகழுவி விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். 

நன்றி மறத்தல் கொடிய பாவம். சின்ன வயதில் பெற்ற நண்பர்களிடம் இருந்து பெற்ற குதூகலம் போல், இனி அச்சந்தர்ப்பம் வருமா? 

அப்படியிருக்க, இளமைக் காலத்து நிகழ்வுகளை மறந்து, பழகிய நட்பை மறந்து, உயர்நிலைக்கு வந்தபின்னர், அதே நட்பைக் களைபவன் நன்றி மறந்த துஷ்டன் அல்லவா? 

எங்களை உருவாக்கியதில் இளமைக்கால அனுபவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஏழ்மையில் கழித்த பலர், எதிர்நீச்சல் அடிப்பதுபோல், வாழ்க்கைப் போராட்டத்தில் ஜெயிப்பதும் புதிதல்ல. 

என்றும் பழைய நினைவுகளை நினைவில் கொள்வதே தொடர்ந்து சிறப்பாக வாழ வழி சமைக்கும். நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும். 

வாழ்வியல் தரிசனம் 30/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


‘நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.