‘நம்பிக்கைத் துரோகம்’

நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் சொல்லக்கூடாத இரகசியங்கள் இருந்தால், அதனை மறந்து விடுவதே நல்லது. மிகவும் நெருக்கமாகப் பழகிய போது பகிரப்பட்ட இரகசியங்களை, பின்னர் மனஸ்தாபம் ஏற்பட்டதும் சொல்லித் திரிவது அழகல்ல. இது கூட, ஒரு நம்பிக்கைத் துரோகம்தான்.

இன்னும் சிலர், ஒருவரது அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி விடுவேன் எனப் பயமுறுத்துவதுடன் பணம் பறிக்கும் கெட்ட காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

துர்ச்செயலைத் தங்களது உரிமை எனக் கருதி, தவறான மோசமான காரியங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற கோழைத்தனம், வேறொன்றும் இல்லை.

எவரையும் நம்பி, கண்டபடி உளறுதல் ஆபத்தானது. நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பதும் கடினம்.

வாழ்வியல் தரிசனம் 07/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


‘நம்பிக்கைத் துரோகம்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.