‘நினைவுகளை மீட்க நேரங்களை ஒதுக்கவும்’

மௌனமாக இருப்பது நல்ல நினைவுகளை மீட்பதற்கும் காரணமாகின்றது. சதா கடமைகளை ஓய்வின்றிச் செய்யும் நாம், நல்ல நினைவுகளையும் மீட்டுப்பார்க்க நேரங்களை ஒதுக்குதல் வேண்டும். 

நல்ல சம்பவங்களை மனதில் நிறுத்தினால் அதன் மூலம் வும் ஆனந்தமும் உருவாகும். நிர்ச் சிந்தனையுடன் எதையும் நினைத்துக் கொள்ளாமல் இருப்பது கடினம்.  

ஆனால், தனிமையில் நல்ல சிந்தனைகளையே மீட்டுப் பார்த்தால், வீண் சலனங்கள் கரைந்து விடும். கலகலப்பான சந்தர்ப்பங்களில் அனைவருடனும் மனம்விட்டுப் பேசவேண்டும். 

 இறைவனை வழிபடும்போது, நிசப்தமாக அவருடன், உங்கள் எண்ணங்களைச் சமர்ப்பித்து விடுங்கள். தூயசிந்தனையுடன் மௌனமான பிரார்த்தனை கடவுளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.  

அமைதி, பக்தியையும் பேரன்பையும் விசாலமாக்குகின்றது.

வாழ்வியல் தரிசனம் 10/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

  • siva Wednesday, 10 January 2018 05:17 PM

    golden words . god is great .

    Reply : 0       0


‘நினைவுகளை மீட்க நேரங்களை ஒதுக்கவும்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.