‘பிறரது மகிழ்ச்சியை அழிக்காதீர்’

சந்தோசமான காரியங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்​போதுகூட, துன்பமான விடயங்களை மீட்டுப்பார்க்கும் இயல்புடன் சிலர் நடந்து கொள்கின்றார்கள். 

எப்பவோ, எங்கேயோ நடந்த விடயங்களை மறக்க முயற்சிப்பதை விடுத்து, நல்ல காரியங்கள் நடக்கும்போது நினைவுபடுத்துதல் என்றும் நிறைவைத் தரமாட்டாது. எனினும், சோகமே சுகமானது என எண்ணுவது கோணல் புத்திதான். 

உங்களைச் சுற்றி சந்தோஷங்களை மட்டுமே பரப்புவீர்களாக. மறக்க வொண்ணா நினைவுகள் பலவும் எம்மை ஆக்கிரமிக்கலாம். அவை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிகழ்பவைதான். மனிதன் தன்னை ஆசுவாசப்படுத்தி, தொடர்ந்தும் இயங்குபவனாக இருந்தேயாக வேண்டும். 

அழுகை மூலம் மற்றவர்களைக் கோழையாக்க முனைதல் அறிவீனம். எவரையும் பலவீனப்படுத்தும் வகையில் நடப்பது, சுயநலமானதும் கூட. தன்னைப்போல மற்றவர்களும் கவலைப்படுதல் வேண்டும் எனக் கருதுதல் வக்கிரமான சிந்தனை. மகிழ்ச்சியாக வாழத் தெரியாதவர்கள், பிறரது மகிழ்ச்சியை அழிக்காமல் இருந்தாலே போதும்.

வாழ்வியல் தரிசனம் 18/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


‘பிறரது மகிழ்ச்சியை அழிக்காதீர்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.