2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அன்பின் பயணம் நிறுத்தப்படுவதில்லை’

Editorial   / 2018 பெப்ரவரி 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னைச் சுற்றியுள்ள உறவுகளைச் சந்தோசப்படுத்தாமல், அவர்களை வெறுத்து, ஒதுக்கும் போதுதான், வெறுமை குடிகொள்கின்றது. பிறரை வெறுத்துக் கொண்டால், களையிழந்த நிலைதான் ஏற்படும்.

அன்பின் பயணம்  நிறுத்தப்படுவதேயில்லை. இது, தொடர்ந்தும் பல உரிமையுள்ள அன்பர்களை உருவாக்கிய படியே இனிமை சேர்க்கும்.

நல்லவர்கள், எவரையும் கலவரப்படுத்த மாட்டார்கள். சந்தோசமாக வாழ, மன அழுத்தங்களைப் பிரயோகிக்கும் எதிர்மறைக் குணங்களைக் கொண்டவர்களுடன்  விவாதிப்பதைத் தவிர்ப்பதே உத்தமம்.

கேலிக்குக்கூட ஒருவரைத் துயரூட்டும் காரியங்களைத் தவிர்த்திடுக. நாங்கள் படும் சின்ன வேதனையை, ஏற்றுக் கொள்ளாதிடத்து, மற்றவரை துன்பமூட்டுதல் எப்படிச் சரியானதாக அமையும்.

எவருக்கும் நாம் எதிரிகள் அல்லர். அதுபோல், எம்மையும் நாம் நல்ல தோழனாக்குவோம். எம்மைவிட, நல்லவரைத் தேடுவோம்.

வாழ்வியல் தரிசனம் 27/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .