2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘இதயம் தெளிவாக அமைய வேண்டும்’

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிலும் பொறுப்பற்றுப் பேசுபவர்கள், மற்றவர்களின் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது, தமக்குத்தாமே கஷ்டங்களைத் தேடிக்கொள்பவர்களாகின்றனர். 

தங்களுடைய பேச்சுகள் தவறானது எனத் தெரிந்தும் பேசுபவர்கள் ஒரு ரகம். வேண்டுமென்றே, பிறர் மனம் புண்படப் பேசுவதால் திருப்திப்படுவது, அருவருப்பான காரியம் என உணர்வதே இல்லை. 

பேசும் மொழி சுத்தமாக இருக்க, இதயம் தெளிவாக அமைய வேண்டும். கறுப்பு இதயத்தின் வாயிலிலிருந்து நெருப்பாகவே வசனங்கள் வந்துவிழும். தயவுதாட்சண்யம், அன்பு இவர்களிடம் கிடையவே கிடையாது. 

குளிர் நிலவு போன்றநெஞ்சைக் கொள்ளை கொள்ள வைக்க, சுகந்த வாசனைப் பொடிகளை அன்புடன் தெளித்திடுக. 

நல்ல வார்த்தைகளுக்கா பஞ்சம்.தாராள மனசு வேண்டும். அது நல்ல இசையை உங்களுக்குள் சதா மீட்டியபடியே இருக்கும். 

வாழ்வியல் தரிசனம் 04/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X