2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இதுதான் விதியா?

Editorial   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விதி என்ற சொற்பதத்தில் பல்வேறுபட்ட விளக்கங்களைப்  பலரும் கூறுகிறார்கள். ஒருவருக்கு அதிர்ஷ்டம் வந்தால் அது அவர் விதி என்பார்கள். அதேபோல் ஒருவருக்கு எதிர்பாராத இழப்புகள் வந்தாலும் விதி என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால், சுயவிதி என்றும் ஒரு விதியை மனிதன் ஏற்படுத்துகிறான்.பெரு முயற்சி செய்து, தன்னை உயர்த்துவதும், எதுவுமே செய்யாமல் சோம்பலால் ஏற்படும் துன்பங்களும் மனிதன் தன்னாலேயே ஏற்படுத்தும் சுயவிதிதான்.

கெட்ட செயல்களைச் செய்து, அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது,“எனது விதியைப் பார்த்தீர்களா” எனப் புலம்பும் பேர்வழிகளின் போக்கு நியாயமானதா?ஆனால் எமது வாழ்வில் ஏற்படும் நல்லவைகள் கெட்டவைகளின் முழுக்காரணம் எதுவெனப் புரிவதில்லை. இதுதான் விதியா?

வாழ்வியல் தரிசனம் 09/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .