2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்த அவல நிலை ஏன் தொடர்கின்றது?

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேரிப்புறம் என்றால் எமக்கு நினைவுக்கு வருவது அழுக்கான, சுகாதாரம் என்றால் என்ன என்று தெரியாது வாழும், மக்கள் வாழும் இடம் என்று எண்ணிக்கொள்கின்றோம். ஆனால், சேரி என்பது, மக்கள் சேர்ந்து வாழும் இடம். மக்களை இணைத்துக்கொண்டு, சமூகமாகக் கூடி வாழும் பிரதேசம். 

இன்று ஏழ்மையுடன் வாழும் மக்கள், ஒதுக்குப் புறமான இடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல், குடில்களில் அடிமை வாழ்வு போல் வாழும் இடத்தையே சேரி என்று அழைத்து, அதைக் கொச்சைப்படுத்துகின்றோம்.  

சமூக ஏற்றதாழ்வு, வறுமைகளை உருவாக்கி, அவர்களை ஒதுக்கிவைத்தவர்கள் யார்? இந்த அவல நிலை ஏன் தொடர்கின்றது? நல்ல தமிழ்ச் சொல்லை அவமதித்து, அதற்குள் ஏழைகளைப் புகுத்தி, துன்ப வாழ்வில் என்றும் திழைக்க வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஏழைஎளிய மக்களை ஏய்த்து, வாக்குக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளிடம்தான், இந்தக் கேள்விகளைக் கேட்கவேண்டும். 

வாழ்வியல் தரிசனம் 14/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .