2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘இயற்கைக்குக் கோபம்வரும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபஞ்சத்தின் மகா இரகசியங்களையும் புரிந்து கொள்ள விழையும் மனிதன், தன்னோடு பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமானியனின் நியாயபூர்வமான தேவைகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

மனித இதயங்களில் தேங்கியிருக்கும் துன்பங்களைக் கண்டறிந்து ஆறுதலூட்டுவதே இந்த முழு உலகையும் பலப்படுத்த வல்லது என உணர்வீர்களாக.

நேயமும் பகை கருதா நெஞ்சும் அரவணைக்கும் மாண்பும் இணைந்தால் பூமியில் அதிர்வும் இயற்கை அனர்த்தமும் எரிமலைக் குமுறல்களும் சமுத்திரச் சீற்றங்களும் நிறுத்தப்பட்டு விடும்.

மாந்தர் இணையாது விட்டால், இயற்கைக்குக் கோபம்வரும். நாங்கள் பெருமூச்சு விட்டால், சுற்றாடல் அசுத்தமாகி விடும்.

சந்தோசங்களே, எங்களைச் சாதனை செய்யத் தூண்டுகின்றன. தனிமை எனும் சோகத்தில், சுவர்களுக்குள் அடைபட்டால், ஆன்மாவின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடும். அனைவரிடமும் நேயம் கொண்டால்  பன்மடங்கு பலம் பெருகும். அதுவே பரம ஆனந்தம்.

   வாழ்வியல் தரிசனம் 08/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .