2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இயற்கையைப் புறக்கணித்தால், இயங்காது வேளாண்மை’

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல செழுமைமிகு தரையில் மழை பெய்யும்போது, ஓர் அதீத வாசனை கிளம்பும். இதை மண்வாசனை என்கின்றோம். உண்மையில் இந்த மண்வாசனை என்றால் என்ன?

மழைநீர் தரையைத் தொட்டதும், மண்ணில் இருக்கும் நுண்உயிர்கள், உயிர்ப்புடன் கிளம்பும்போது, ஒரு வாசனை எங்கள் நாசியில் தொட்டு நிற்கும்.

ஆனால், இந்த இயற்கையின் வருடலை, எம்மவர்கள் கிருமிநாசினி கொண்டு, பயிர்களை அழிக்கும் கிருமிகளைக் கொல்லப்பார்க்கிறார்கள்.

கிருமிநாசினியால், பயிர்களின் வளர்ச்சிக்குப் பாரிய உதவிபுரியும் நுண் உயிர்களே அழிந்து விடுகின்றன.

இந்தக் கிருமிநாசினிகளின் பாவனையால், மண்வளம் இன்று குறைந்து வருகின்றது.

எமது முன்னோர்கள், இயற்கை முறையிலான வேளாண்மையை மட்டுமே செய்து வந்தனர். இயற்கையைப் புறக்கணித்தால், இயங்காது வேளாண்மை.

     வாழ்வியல் தரிசனம் 09/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .