2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இரசனை கூட, அன்பளிப்புத்தான்’

Editorial   / 2018 மார்ச் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்தத்தில் மௌனத்தைத் தரிசிப்பதும் மௌனத்தில் மாபெரும் ஓசையைக் காண்பவனே சித்தன்.

மிக அதிகமாகப் பேசுபவர்களையும் ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருப்பதையும் பக்கத்தில் இருப்பவர்கள் இரசிக்க மாட்டார்கள்.

இடி, மின்னல், பலத்த மழை, காற்று இவைகளை இரசித்துப் பாருங்கள். எல்லாமே எங்களை மகிழ்விக்கக்கூடிய இயற்கை தந்த வெகுமதிப் படைப்புகளேயாகும்.

எதையும் வெறுக்கும் முன், அவைகள் தருகின்ற அனுகூலங்களையும் அற்புதங்களையும் சற்று நோக்கப் பழகுங்கள்.

இரசனை கூட, எமக்கு வழங்கப்பட்ட பெரும் அன்பளிப்புத்தான்.

இது, எம்மை உற்சாகப்படுத்தும்; மனச்சாந்தி கொள்ளச் செய்யும்.

சில விடயங்களை எங்கள் நெஞ்சம் ஏற்பதுமில்லை. ஆனால், நாங்கள் விரும்புவதும் ஏற்கக்கூடியதும் அல்ல.

வாழ்வியல் தரிசனம் 06/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .