2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இறைவன் மீதான அன்பை ஊட்டியபடி இருக்க வேண்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வியால் கடவுளைக் காண முடியாது. இறை விசுவாசம் உள்ள சாமானிய மனிதனின் மனத்திடம், நம்பிக்கை ஆகியவை படித்தவனுக்கு கூடுதலாக இருக்கும் எனச் சொல்லமுடியுமா? கல்வி, அறிவு அகந்தையை ஏற்படுத்தலாம். ஆனால், பாமரன் ஒரு யோகியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.  

கல்விக்கு மேல் செல்ல, அறிஞர்கள் பலருக்கும் இஷ்டமில்லை. அதனுள்ளே பிணைந்து நிற்பதால், அவனால் ஆன்மாவைச் சுத்தப்படுத்த கால அவகாசத்தை ஏற்படுத்தாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  

ஆனால், இந்த உலகத்தில் கல்வி, அறிவு தேவையில்லை எனும் அர்த்தம் கிடையாது. கல்வியுடன் இறைவன் மீதான அன்பையும் ஊட்டியபடி இருக்க வேண்டும்.  இன்று ஆன்ம ஞானம் பற்றிய தேடல்களில் சாமானிய பாமரனுக்கு ஈர்ப்பு; பெரும் செல்வந்தர்களுக்கோ படித்தவர்களுக்கோ உண்டா என்பது கேள்விக்குரியதே. இறைவன் மீதான வாத்ஸல்யம் ஜீவனை ஒளியேற்றும். இந்த மேலான ஆகர்ஷிப்பை எவராலும் ஏற்படுத்திவிட முடியும். பக்தியே ஒரே வழி. 

     வாழ்வியல் தரிசனம் 27/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .