2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘உரிமைப் போர் தொடுப்பதில் தவறு இல்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிமைச் சண்டைகள் சுவாரஷ்யமானதுதான். குழந்தைகள் தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ள அடம்பிடித்துச் சண்டையிட்டுப் பெற்றோர்களிடமிருந்து பெற்றுவிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  

​அதுபோலவே, உங்களுக்கு எது தேவையோ, அதை அடைய இறைவனிடம் உரிமைப் போர் தொடுப்பதில் தவறே கிடையாது.  

மெய் அடியார்கள் கடவுளிடம் பக்தி மேலீட்டினால், அவரிடம் கண்டிப்புடன் கேட்டு, அனைத்தையும் பெற்றமையை நீங்கள் படித்திருப்பீர்கள்.  

தாயை விட மேலான கருணையும் அன்பும் கொண்டவர் இறைவன். நாங்கள் அவர்களின் செல்லப் பிள்ளைகள். எனவே தயக்கமோ கூச்சமோ இன்றி, பிடிவாதமாக வரம் கேட்பதை அவர் இரசிப்பார். இதில் கோபிக்க எதுவும் இல்லை. கடவுளைவிட, உரிமையுடனான கரிசனை வேறு எவரிடத்தில் உண்டு? 

     வாழ்வியல் தரிசனம் 29/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X