2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘எங்கள் உறவு நீ’

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்மண் யாசக பூமியாய்த் தோற்றமளிக்கும்; சொந்த நாட்டில் உள்ள இரத்த பந்தங்களை கேலிக்குரிய விலங்குகளாகக் கருத முற்படும். பாரம்பரிய பண்புகள்கூட வெறுப்புடன் நோக்கத்தக்கதாக சிந்தை மாறிவிடும். தன்னிலை அறியும் ஆற்றலை இழந்துபோவதானது துன்பமான விடயம் மாத்திரமல்ல; காலத்தின் கொடுமையானது என அறியமாட்டாய். 

பெருமைக்குரிய முன்னைய சந்ததிகள், தாய்மண்ணில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் முகங்கள் மறைந்தே போகும். உனது மொ​ழியை மனதில் இருந்து அழித்து, புதுமொழியை உன்தாய் மொழி எனக் கருதி, மயங்கினால் அதில் என்ன புதுமையுண்டு. ஏனெனில், நீ எந்த நாட்டுக்கும் சேராத வேற்றுக்கிரகவாசி போலாவாய். நாடு கடந்தோரிலும் விதிவிலக்கானோர் உண்டு.  

குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்ற உறவுகளை அரவணைக்க முடியாத, நெருங்கி வாழ்ந்தாலும் விலகி வாழும் துன்பம்தான் உன்னை ஆட்கொள்ளும்.

நீ, நீயாக இல்லாமல், பாசாங்குத்தனமான, விரும்பத்தகாத வடிவத்துடன், மாயஅழகை நம்பிய ஏமாற்றத்துடன் வாழும் ஏமாளி நீ; அகதிப் பரதேசியாய், செல்வம் இருந்தும் சுகானுபவம்தேட முடியாத முடிவிலிப் பரிதாப ஜீவன் நீ. எனினும் எங்கள் உறவு நீ.  

       வாழ்வியல் தரிசனம் 16/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X