2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எத்தனை நொடிகளை வீணாக்கியுள்ளீர்கள்?

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நொடிப் பொழுது கூட, வியத்தகு பணிகளைச் செய்து முடிக்க வல்லது. ஓட்டப் போட்டியின் வெற்றிகளை நிர்ணயிப்பது, மிகத் துளிகளில் ஒன்றான விநாடி தான். இப்படியிருக்க, மனிதர் ஒருநாளில் எத்தனை விநாடிகள் கழிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவைகளில் எத்தனை நொடிகளை வீணாக்கியுள்ளீர்கள் என்பதையும் எண்ணினால், விழிப்புநிலை, கட்டாயம் உங்களை உஷாராக்கிவிடும்.

கோடீஸ்வரர் ஒருவர் என்னிடம் கூறினார், “நான் காலத்தை அநியாயமாகக் கரைத்து விட்டேன். நான், முதுமை அடைந்த பின்னர் தான், உழைக்கும் ஆசையே எனக்கு வந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு, அதி உன்னத நிலைக்கு இன்று வந்துவிட்டேன். இந்த அறிவு, நான் இளைஞனாக இருந்தபோது வந்திருந்தால், இந்த நாட்டில், முன்னணி கோடீஸ்வரர் வரிசையில் வந்திருப்பேன்” என்று. இளையவர்கள் இதனை உணர்க.

நன்றாக உழைப்பவர்கள், ஒரு பொழுதும் சும்மா இருப்பது இல்லை. அடுத்ததாக, அதற்கும் அடுத்ததாக, என்ன செய்ய வேண்டும் என்றே, சதா மனதை உஷார்படுத்திய வண்ணமிருப்பர்.

வாழ்வியல் தரிசனம் 01/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .