2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எப்படிப் பெருமை பேச முடியும்?

Editorial   / 2017 டிசெம்பர் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது பேரன், பேத்திகளையே தெரியாமல் வாழ்பவர்கள் அநேகர். அதாவது பாட்டன், பாட்டிமார்களைத்தான் சொல்கின்றேன். 

தூரதேசங்களுக்கு தங்கள் தாய், தந்தையை விட்டுவிட்டுச் செல்பவர்களில் அநேகர், இன்னமும் தத்தமது தாய் நாடுகளுக்குத் திரும்பாமலே இருக்கின்றனர்.  

இந்த இலட்சணத்தில், முன்னைய தலைமுறைகளான பாட்டன்மார்களை நினைவுகூராமல் இருப்பது ஒன்றும் புதுமையானதுமல்ல. ஆனால், மேற்கத்தைய நாடுகளில், தங்களது குடும்ப உறுப்பினர்களின் வம்சத்தின் பெயர்களையே, இன்னமும் தங்கள் பெயர்களுடன் இணைத்து வைத்து வருகின்றனர்.  

எங்கள் குடும்பத்தில் எனது மூன்று தலைமுறைகளின் பெயரையே வைத்துள்ளனர். தாங்கள் எந்தத் தலைமுறையில் இருந்து வந்தோம் என்பதை அறியாமல் இனம், மொழிப்பற்று எப்படிப் பெருமை பேச முடியும்?  

பரம்பரை என்பது வெறும் பேச்சளவில் மட்டுமல்ல; அது இனம், மொழி சார்ந்த உன்னதமானது.  

வாழ்வியல் தரிசனம் 26/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X