2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘எல்லாமே கைகூடும்’

Editorial   / 2018 ஜூலை 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழிகளைத் தீட்சண்யமாக வைத்திருங்கள்; செவிகளைக் கூர்மையாக்குங்கள்; பேச்சில் இனிமையையும் உறுதியையும் கலந்திடுங்கள். துணிவும், அன்பும், நிதானமும் என்றும் இருந்தால், உங்களைவிடச் சிறந்தவர்கள் எவருமில்லை. எல்லா மனிதர்களும் இவ்வண்ணம் வாழ்ந்து வந்தால், நல்லோர் உலகம் நிலைபெறும். 

எல்லோராலும் நல்லபடி வாழமுடியும். உங்களுக்குள் இருக்கும் இதயத்தில் என்றும் தூய்மையை ஏற்றினால் போதும். எல்லாமே கைகூடும். ஒருவர் எப்படி மேன்மையுடன் வாழ்கின்றார் என்பது, அவர்களின் ஆன்மபலம் என்பதேயாகும். போராடும் தைரியத்தை இது ஊட்டுகின்றது. 

விரிந்த மார்பும் நெடிய தோற்றமும் உடல்வலு மட்டும் இருந்தால் போதுமா? மனம் மாசு இன்றி இருக்க வேண்டும். 

நல்ல புத்தகங்களின் உள்ளடக்கங்களை உங்கள் மூளையில் பதிவுசெய்திடுக. முன்பை விட, இன்று நான் நன்றாக இருக்கின்றேன் என்று எண்ணுக. உங்கள் இலட்சியங்கள் நனவாவது கண்முன்னே தெரியும்.  

வாழ்வியல் தரிசனம் 11/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .