2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எல்லாமே மாயை; கனவு’

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்ம காரியங்களில் ஈடுபடும் பொது நிறுவனத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர், இல்லம் சென்று நிதியுதவி கோரினார். மிகவும் வற்புறுத்தியமையினால் அவர் பத்தாயிரம் ரூபாய் தருவதாகக் கூறினார். அவர்கள் சென்றதும் அவர் மனம் அலைபாய்ந்தது. தெரியாமல் வாக்குக்கொடுத்து விட்டேனே; இனி என்ன செய்வது என்று யோசித்தவாறு மனம் உடைந்துபோனார்.

திடீரென நித்திரை கலைந்து, விழிப்பு நிலைக்கு வந்தபோதுதான், அடடா! நான் இப்போது கண்டதெல்லாம் கனவா... நல்ல காலம் நான் தப்பித்துக் கொண்டேன். எனக்குப் பத்தாயிரம் ரூபாய் இலாபம் எனச் சந்தோசப்பட்டார் அந்த அப்பாவி மனுசன்.

எல்லாமே மாயை; கனவு. இவை தான் வாழ்க்கை என்பார்கள். ஆனால், எதையும் விட்டுக்கொடுக்க மனிதர்கள் தயாராகவில்லை. இறந்தவன் பல வருடங்களின் பின்னர் விழித்தெழுந்தால், இந்த உலக மாற்றங்களைக் கேட்டு என்ன சொல்வான்? அடஇதுதானா வாழ்க்கை? உறங்கி விழித்ததுபோல் இருக்கிறது. அப்படியானால் நான் யார்? பதிலைத் தேடுக!

வாழ்வியல் தரிசனம் 13/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .