2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘எல்லோருக்கும் ஆறுதல் அளிப்பேன்’

Editorial   / 2017 நவம்பர் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்தச் சமூகத்துக்கு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை; நான் வசதியற்றவன்; மனதில் திராணியும் இல்லை; என்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்” எனச் சிலர் சொல்வதுண்டு. 

இவ்வாறான பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உதவிசெய்யப் பணம் மட்டும் தேவையானது அல்ல; எல்லோருக்கும் ஆறுதல் அளிப்பேன் என்கின்ற வலுவான எண்ணம் இருந்தால் மட்டும் போதும். எமக்கான ஆற்றல்கள் தானாகவே வந்துவிடும்.  

வெறும் வாயால் சொல்வதை விட, உங்கள் மனதுக்கு நீங்கள் நல்ல காரியம் செய்ய விரும்புவதாகச் சொல்லுங்கள். நல்ல பணி செய்யச் சலனமான நினைப்புடன் இயங்க வேண்டாம். 

எந்த நல்ல பணியையும் முதல் தொடங்கி விடுங்கள். அப்புறம் எல்லாமே நன்றாக நடக்கும். உங்களுடன் பல கரங்கள் இணைந்து கொள்ளும். எதற்கும் வீணான சாட்டுதல்களைச் சொல்லற்க. உடல் உழைப்பை நல்குவதே, பணத்தை விடமேலானது. 

     வாழ்வியல் தரிசனம் 10/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .