2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஏழைகளுடன் தோழமை கொள்க’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்நாள் முழுவதும், சகல சம்பத்துகளுடனும் சௌக்கியமாக வாழ்வதற்கு, எந்த விதமான துன்ப அனுபவங்களோ, எதையும் கண்டுகொள்ளச் சிரமப்படவேண்டிய தேவைகளும் இல்லை. 

ஆனால், இத்தகையவர்கள் தங்கள் பெரும் அறிவு, உலக ஞானம் பற்றிப் பொய்யான தகவல்களைச் சொல்லிய வண்ணம் இருப்பார்ககள். 

உலகில் வறுமையில் வாழும் மக்களின் குடிசைகள், அவர்களின் உணவுத் தேவைகள், வருமானம், அவர்களின் துன்பம் பற்றித் தெரியாதவர்கள், அந்தத் துன்ப நிலை பற்றி, அறியப் பிரியப்படாமல் இருப்பது புதுமையல்ல. 

மனித வாழ்வை ஆராயாமலே, பலர் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பசி தெரியாமலே, கோடானகோடிப் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பழைய கஞ்சி குடித்து வாழ்பவனை, நோக்க நேரம் இருக்கிறதா? 

நாம் எல்லோரும் ஒரே இனம்; அதாவது, மனித இனம் என்று சொல்லிக்கொள்கின்றோம். மனிதனை, மனிதன் தாங்காமல் வெறும் வாய்ச்சொல்லால் மட்டும், ‘ஒரே ஜாதி, ஒரே இனம்’ என்ற சொல்வதால் எதுவும் ஈடேறிவிடாது.  

ஏழைகளுடன் தோழமை கொள்ள, இன்னுமோர் ஏழைதான் முன்வருவான்.  

வாழ்வியல் தரிசனம் 24/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .