2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘கடின மனம் கரைய வேண்டும்’

Editorial   / 2017 நவம்பர் 13 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலவரையறைக்கு உட்பட்டு வாழும் நாம், காலவரையறைக்கும் அப்பாலுக்கும் அப்பால், உள்ள இறைவனின் திருவருளை நினைவுகூருதல் வேண்டும்.

எமது சிற்றறிவு எங்களை பெரும் அறிவாளிகளாக எண்ண வைக்கின்றது. மெய் அறிவான கடவுளை இந்தப் புலன் அறிவுகொண்டு அளவீடு செய்ய முடியாது.

ஆனால், எமது ஆன்மாவை வலுப்படுத்தியே ஆக வேண்டும். நியாயம், நீதிக்கு அப்பால், வாழ்தல் ஆன்ம நிந்தனை என்பதை உணர்ந்தால் பாவத்தின் மிகக் கொடூர முகத்திரையில் இருந்து விலகி உள் ஒளியைத் தரிசிக்கும் பாக்கியதைப் பெறமுடியும்.

உள்ளம் நெகிழ்தல் என்பது பக்தியினால் மட்டுமே உணர முடியும். கடின மனம் கரைய வேண்டும். இறுகிய நெஞ்சு உருக்கப்பட்டால் இறைவன் மீதான நெருக்கம் இயல்பாக வந்தெய்தும்.

 

     வாழ்வியல் தரிசனம் 13/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .