2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘கவலையுடன் வாழ்வதைவிடக் கருமத்தைச் செய்வதே மேல்’

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைச்சிப்பாய் ஒருவனுக்கு படை முகாமில் இருக்கவே பிடிக்கவில்லை. காரணம் என்னவெனில், தனது ஆருயிர்க் காதலியை, விட்டுவிட்டுச் சேவை புரிய வந்தபோது, பொழுதெல்லாம் அவள் நினைவினால் தவித்துப்போனான்.  

இங்கிருந்து தப்புவதற்கு ஏது வழி எனச் சிந்திக்கலானான்.  தினமும் வேண்டுமென்றே, சில தவறுகளைச் செய்தான். ஆனால் அவனை, அதிகாரிகள் வேலையில் இருந்து தூக்கிவிடாமல் சிறுசிறு தண்டனைகளையே விதித்தனர். முடிவு எப்படியோ முகாமை விட்டுத் தப்பித்து வெளியேறினான். அதுவும் சாத்தியப்படவேயில்லை; பிடிபட்டான்.

மீண்டும் கட்டாய சேவையில் அமர்த்தப்பட்டான்.  ஆனால், அவனுக்கு திடீரென ஒரு செய்தி வந்தது. அவனது காதலி வீட்டை விட்டு ஓடிப்போய், வேறோருவனைக் கைப்பிடித்துக் கொண்டாள் என்பதே அந்தச் செய்தியாகும். பித்துப்பிடித்தவனானான். மனம் அலை பாய்ந்தது. இவளை நினைத்து மறுகுவதை விட, இருக்கும் பணியைச் செய்வதே மேலானது என எண்ணி, தன்னை மாற்றிக்கொண்டான். கவலையுடன் வாழ்வதைவிடக் கருமத்தைச் செய்வதே மேல்.  

     வாழ்வியல் தரிசனம் 06/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .