2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘கிடைத்த வாழ்க்கையே நிச்சயமானது’

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னைப் பார்க்காது என்னைப் பார்த்து, “எப்படியடா இப்படி வளர்ந்து விட்டாய்”? என்றாள். “குஞ்சுப் பெண்ணாய் இருந்த நீ குண்டுப் பெண்ணாகி விட்டாயே” என்று அவளைக் கேட்டபோது, வெட்கம் மீதூர, “நான் கேட்டது தப்பு; விட்டுவிடு என்னை” என்றாள். கடந்த காலத்தில் நடந்தேறிய காதல் இது. 

சின்ன வயதில் சண்டையிட்டோம். பெரியவர்கள் அதைப் பெரிதாக்கிப் பிரிந்து போனார்கள். என்னைப் பார்த்துப் பேசக் கூசினர். விட்டேனா நான்! முறைசொல்லி அவர்கள் மனத்துக்குள் இடம்பிடிக்க முயன்றேன்.  

என்னிடம் கேட்காமலே என் விதி எழுதப்பட்டது. யாரோ ஒருத்தி கழுத்தை நீட்டினாள். அழாத நான் அழுது ஓய்ந்தேன். எனது மனைவி என்னை மாற்றினாள்; புது உருவம் தீட்டினாள்.  

நீண்ட காலம் நெடிய பயணம்; பாரீஸ் மாநகரில் கணவர், குழந்தைகளுடன் குதூகலமாய் அவள் தோற்றம். “ஹாய்” என்றாள். உடன் அவள் கணவனும் “ஹாய்” என்றான்.  

எனது மனைவி குறும்புடன் பார்க்க என் ​மகன் விழித்தான். புன்முறுவலுடன் பிரிந்து சென்றோம். கிடைத்த வாழ்க்கையே நிச்சயமானது. புரிந்து கொள்க; இன்பம் பெருகிட வாழ்க.  

   வாழ்வியல் தரிசனம் 05/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X