2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கோழைத்தனமான நடிப்பு’

Editorial   / 2018 மார்ச் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிமை நிறைந்த பெரும்பான்மைச் சமூகம், வலுக்குன்றிய சமூகத்தைக் குற்றம் சுமத்தியபடியே, சமாதானத்துக்கு அழைப்பது, வேடிக்கையானதும் மமதையின் உச்சமுமாகும். 

இவையெல்லாமே ஒப்புக்காக உலகத்தை ஏய்க்கும் செய்கைகள். ஆனால், இத்தகைய நோக்கம் கொண்டவர்கள், தமது சுயநல நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக மிரட்டும் தொனியுடன் பேசுவதை விட்டு விடுவதேயில்லை.  பரந்த, விசுவாசமான, உறுதியான செம்மையுடன் உரையாட விரும்பாது விட்டால், மீளாத இருட்டுக்குள் எல்லோரும் வாழ வேண்டியதுதான். 

ஒற்றுமையுடன் வாழ்வதில் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது? நெஞ்சில் உரம் கொண்டவர்கள்போல், உலகத்துக்குப் பயமேதும் இல்லை என்று சொல்வதும்கூட கோழைத்தனமான  நடிப்புத்தான். 

கொடுத்து மகிழ்வதே சந்தோஷம். பறித்து எடுப்பதில் ஏது சுகம்? கர்ஜனை மூலம் சுபீட்சம் கிட்டாது. அமைதி வழியே சிறந்தது.  

வாழ்வியல் தரிசனம் 28/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .