2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தகாத நட்புகளை விலக்கி விடுக’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாக்கிரதையாக இரு என்பதன் அர்த்த​ம், வீட்டுக்குள் முடங்கி, ஒடுங்கிக் கிடப்பது அல்ல; இந்த உலகில் எல்லாமே நடக்கும். நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பிட முடியாது. அதுசரி, அப்படியாயின் எப்படி நாம் ஜாக்கிரதையாக இருப்பது ஐயா? 

தகாத நட்புகளை விலக்கி விடுக. அறிமுகமில்லாத நபர்களுடன் அதிகம் பேசற்க. பேசும் வார்த்தைகளில் வரைமுறையுண்டு.  

நன்றாகப் பழகிய நண்பர்கள், பெரியோர்களிடம் மட்டும் மனம்விட்டுப் பேசினால், நெஞ்சில் பாரம் குறையும். அதனை விடுத்துப் பொது இடங்களில், நாவடக்கம் அவசியமானது. இக்காலத்து அரசியல் அப்படியிருக்கிறது. மதில்களுக்கும் செவிஉண்டு.  

கண்டபடி உண்ணற்க; சுகாதாரம் பேணுக! கல்வி என்பது அறிவை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் வளர்ப்பதாகும். ஒழுக்க நெறிகளே எம்மைக் காப்பாற்ற வல்லது. எளிமையாக நேர்மையுடன் வாழ்ந்தால் இடையூறு வாழ்க்கையில் ஏது? 

     வாழ்வியல் தரிசனம் 23/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .