2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தெரியாத முகங்களே கனிவுடன் நோக்குகின்றன’

Editorial   / 2017 நவம்பர் 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகம் தெரிந்த முகங்களைவிட, தெரியாத முகங்களே கனிவுடன் நோக்குகின்றன. எங்கோ ஒரு திசையில் நான் சந்தித்த, இந்த முகவரி தெரியாத அன்பு உள்ளங்களே, என்னைத் தொடர்ந்து இயங்குமாறு தூண்டுகின்றன.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத பந்தங்கள்; அவை உறவுகளும் அல்ல. ஆனால், மனிதர்களைவிட, பட்சிகள், பறவைகள், பிராணிகள் கூட என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்கள்தான். இவைகளுக்குக் குரோத, வைராக்கியங்கள் இல்லை. நேசிக்கும் அல்லது விரும்பாத உறவுகளுடன் கூடவே இவைகளையும் இரட்சித்து மகிழுங்கள்.

இவைகளின் சத்தங்களைப் ஸ்பரிசிப்பது ஆயுள்விருத்திக்கு உதவும். அன்புடன் நேசிக்காதவர்களையும் ஆசீர்வாதம் செய்வதில் பரம ஆனந்தம் உண்டு. அதை ஒரு முறையாவது அனுபவிக்கப் பிரியப்படுங்கள். அந்தப் பரமஆனந்தத்தின் உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

என்றும் இன்பமயமான இந்த உருண்டை உலகு, உங்களுக்கே சொந்தமாக, பேதம் பார்க்காது, உறவுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். 

     வாழ்வியல் தரிசனம் 20/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .