2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘தொலைக்க வேண்டியதை அணைக்கலாகாது’

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனத்துக்கும் அழகுக்கும் சம்பந்தம் இருக்கின்றது. நெஞ்சில் எந்த விதமான சலனமும் இன்றி வாழ்பவர்கள், அழுத்தங்களைக் களைந்து எறிபவர்களாகின்றனர். 

எனவே, முகம் எந்நேரமும் பிரகாசித்த வண்ணம் இருக்கும். இதனால் தேகமும் வலுப்பெற்றுப் புன்னகை தவளும் படியாகத் தங்களை உருவாக்குகின்றார்கள். 

இதனாலேயே, அழகு பெருகுகின்றது. வயது முதிர்ந்தவர்கள் கூடத் தெளிவுடன் வாழ்ந்தால், பராயம் முதிர்வதே தெரியாது. மாறாத, இளமை குன்றாது, அதிசயப் பிறவிபோல் தோற்றம் காட்டி நிற்பர். 

கவலைகளைக் கழற்றுவது எளிதன்று. ஆனால், அவைகளைச் சுமந்து, எவ்வளவு காலத்துக்கு வாழப்போகின்றீர்கள்? துன்பங்கள் சூழாத வாழ்க்கையுண்டோ? 

துன்பம் ​போய்விடத் தயாராக இருந்தாலும், அதை விட்டுவிட விரும்பாத மனிதர்கள், அடுத்து அதிலிருந்து மீண்டுவர எண்ணம் கொள்ள வேண்டுமல்லவா? தொலைக்க வேண்டியதை அணைக்கலாகாது.புரிந்து கொள்க.

வாழ்வியல் தரிசனம் 27/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X