2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நடிப்பு மக்களை மயக்க வல்லது’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிப்பு மக்களை மயக்க வல்லது. இது தெரிந்துதானே, இந்தப் பொல்லாத அரசியல்வாதிகள், மக்களிடம் இந்த வித்தைகளைக் காட்டி வருகின்றார்கள்.

தாங்கள் சொன்னவைகளையே பின்னர் மறுதலிப்பதும், வெளிநாடுகளில் ஒன்றைச் சொல்வதும், தாய்நாட்டில் அதனை மறுப்பதும், தவறான செயல் என அரசியல்வாதிகள் கருதுவதேயில்லை. மக்களும் அதை மறந்துபோவதும் வியப்பு அல்ல!

நீதியான ஒருவரைத் தேர்ந்து எடுப்பதில், மக்கள் தொடர்ந்தும் இயலாமையை வெளிப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. தமக்கான உரிமைகளைப் பிரயோகிக்க, மக்கள் ஏதோ ஒரு பயப்பி​ரமை காரணமாக மறந்து விடுகின்றார்கள்.

மக்களிடம் பொய்மை எனும் ​மாயை ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது. இதை விதைத்தது யார் என்பதை உணர மறுத்து வருவது நாட்டின் போதாத காலம்.

நேர்மையீனத்தில் கைப்பாவையாக அரசியல் திராணியற்றுத் தவிக்கிறது. அரசியல் நல் உருப்பெற வல்லமை தா இறைவா!

     வாழ்வியல் தரிசனம் 19/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .