2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நல்ல குணம் கொண்டவர்களுக்கு, முரணான சிந்தனை எழுவதில்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனம் விரும்பியதைத்தான் எம்மால் செய்யமுடியும். மனத்துக்கு விரோதமாகச் செய்யப் புகுந்தால், எமக்கு நாமே எதிரியாகி விடுவோம். கொஞ்சம்,  வேறுபாடான நபராகக் காட்டிக்கொள்வார்.  

நல்ல குணாம்சம் கொண்டவர்களுக்கு, எக்கணமும் முரணான சிந்தனை எழுவதில்லை. தற்செயலாக, தெரியாத்தனமாகச் சிறு தவறுகளைச் செய்தாலும் அவர்களுக்கு உறக்கமே வருவதில்லை. தங்களைத் தாமே நொந்து கொள்வார்கள்.  

தங்களின் நல்ல மனத்துக்கு, ஒத்துழைக்கும் காரியங்களை மட்டுமே செய்தால், நிறைவாக இருக்கலாம். 

எதிர்மறைத் துர்க்குணங்கள் எவருக்குமே நன்மை பயக்காது. கெட்ட​தைச் செய்து, மனதைக் குட்டையில் அமிழ்த்துதல் இழிவானது. 

சதா எழுகின்ற எண்ணங்களை, உரிய முறையில் ஆய்ந்து, தெரிந்து எம்மை நாம் வழிநடத்தச் சுயசிந்தனையை வலுப்படுத்துவோமாக. மனத்தை நற்குணமாக மாற்றுவதே, பெரும் நோக்கமாகும்.

வாழ்வியல் தரிசனம் 02/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .