2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நல்ல நோக்கம்தான் காரணம்’

Editorial   / 2018 மே 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரோடு ஒருவர் உரையாடும்போது, வார்த்தைகள் சூடேறினால் உடன் யாராவது ஒருவர் தணிந்துபோய், அதை நிறுத்துதல் நல்லது. அப்போது அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக அர்த்தம் இல்லை. தேவையற்ற விதத்தில் கலகம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கம்தான் காரணமாகும்.

இன்று மேடைகளில்  கேட்பது, கருத்துமோதல்கள் அல்ல; ஆணவ மேலீட்டால் எழும் நீயா, நானா என்ற எண்ணம். உன்னைவிட நான் மேதாவி எனும் எண்ணம் மேலோங்குவதுதான் என்பதை அறிக. 

ஒருவர் தனக்குத்தானே, தன்னை மேலானவன் என எண்ணலாம். ஏன் கல்விமானாகச் சமூக அந்தஸ்துப் பெற்றவனாகவும் இருக்கலாம். இத்தகையவர் எவரையும் எடை போடும் தகுதி, எவருக்கும் இல்லை.

பொது மேடையில் சுய புராணம் பாடினால், அதை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று பேசுபவர் நினைப்பது சுத்த அபத்தம்.  பேசும் திறன் உள்ள அறிஞர்கள் கூட, மேடையில் அவமானப்பட்டதுண்டு.

ஆணவம் கொண்டோரை ஒட்ட நறுக்குவது கடவுளின் இயல்பு.

வாழ்வியல் தரிசனம் 24/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X